business

img

கடந்த ஆண்டை விட 51 % அதிகரித்த மருந்து விற்பனை...... ஏப்ரலில் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம்....

புதுதில்லி:
கொரோனா தொற்றின் 2-ஆவது அலை மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் மருந்துப் பொருட்களின் விற்பனை மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்துள் ளது.2020 ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2021 ஏப்ரலில் மருந்துப்பொருட்களின் விற்பனை 51.5 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரத்து 662 கோடிரூபாய் அளவிற்கு மருந்து விற் பனை நடந்துள்ளது.

கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நோய்எதிர்ப்பு சக்தி (Anti-Infectives) தரும் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள், டானிக்குகளை மக்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதனால்,2020 ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் நோய் எதிர்ப்பு சக்தி (Anti-Infectives) வகை சார்ந்த மருந்துகளின் விற்பனை, 2021 ஏப்ரலில் 134 சதவிகிதமும், ஊட்டச்சத்து மருந்துகள் விற்பனை76 சதவிகிதமும் அதிகரித்துள் ளது. 2020 மே மாதம் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மருந்துவிற்பனை சராசரியாக 9 சதவிகிதம் குறைந்து வந்தது. ஆனால்,2021 மார்ச் முதல் மருந்து விற் பனை மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு துவங்கிய நாள் முதல் இந்திய மருந்து நிறுவனங்கள், தங்களின் மருந்து உற்பத்தியை அதிகப்படுத்தியது மட்டும் அல்லாமல் நாடு முழுவதற்குமான விநியோகத்தையும் மிகப்பெரிய அளவிற்கு விரிவுபடுத்தியுள்ளன.

;